(file photo)
அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னாள் Royal Australian Air Force Beechcraft KA350 விமானத்தை இலங்கைக்கு பரிசாக வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் அவுஸ்திரேலியாவின் உள்விவகார அமைச்சரின் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
இதன்படி அவுஸ்திரேலியா Clare O’Neil முறைப்படி இலங்கைக்கு பீச்கிராஃப்ட் KA350 விமானத்தை பரிசாக வழங்கவுள்ளது.
“இந்தப் பரிசு இலங்கையின் கடல்சார் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான திறனை வலுப்படுத்தும்.
இது நாடுகடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் நமது நெருங்கிய ஒத்துழைப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது” என்று உயர் ஸ்தானிகர் கூறியுள்ளார் .