ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இலங்கையர்கள், தமிழகத்தில் தஞ்சம்!

Date:

இலங்கை, யாழ்பாணத்தில் இருந்து 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியினால் விலைவாசி ஏற்றம் தொழில் வாய்ப்பு இல்லாததால் இங்கு வாழ வழியின்றி மக்கள் அபயம் தேடி அகதிகளாக இந்தியாவிற்கு செல்வது தொடர்ந்து வருகிறது.

பொருளாதார சீரழிவு தொடங்கியது முதல் இலங்கையிலிருந்து இதுவரை 253 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர்.

இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த விஜயன் (46), அவரது மனைவி ரஜினி (45), மகள் தபெந்தினி (18) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 1 ஆண், 2 பெண்கள், உட்பட 3 பேர் அகதிகளாக இந்தியா செல்ல திட்டமிட்டு நேற்று முன்தினம் (25.05.23) யாழ்பாணத்திலிருந்து புறப்பட்டு மன்னார் பேசாலைக்கு வந்து அங்கிருந்து இரவு 8 மணியளவில் புறப்பட்டு நள்ளிரவு 02.00 மணிக்கு தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலைமையில் நேற்று அதிகாலை அப்பகுதிக்கு ரோந்துசென்ற ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு பொலிசார் 3 பேரையும் கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாணை செய்து வருகின்றனர்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...