கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களை உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை!

Date:

காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

புதுப்பிக்கத் தேவையில்லாத அனைத்து வகையான அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பில், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த கருத்து தெரிவிக்கையில்,

சுமார் 11 இலட்சம் கனரக போக்குவரத்து சாரதி அனுமதிப் பத்திரங்கள் தற்போது பாவனையில் உள்ளது.

மேலும், மிகவும் அதிக வயதான சாரதிகள், அனுமதிப்பத்திரத்துடன் வாகனங்களை செலுத்துவதே இரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அட்டைகள் இல்லாமல் மிகவும் சிரமமாக இருந்தது.

தற்போது சுமார் 08 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு கணக்குகளில்!

2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர்...

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்!

இன்று (31) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

ஃபியூச்சர் பார்ட்டி’ கலைப்பு: கட்சி அரசியலிலிருந்து விலகுவதாக துருக்கியின் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும் 'ஃபியூச்சர் பார்ட்டி' (Future Party) தலைவருமான அகமத்...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை...