கம்பளையில் காணாமல் போன பெண்ணை கொன்று புதைத்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் !

Date:

கம்பளை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல் போயிருந்த யுவதியை, தான் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ
தெரிவித்துள்ளார்.

கம்பளை பிரதேசத்தில் வசித்துவந்த 22 வயதுடைய பாத்திமா முனவ்வரா என்ற குறித்த யுவதி தனது பணியிடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போயிருந்தார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் 24 வயதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸாரால் கைதுசெய்திருந்தனர்.

குறித்த சந்தேகநபர் யுவதியை ​​காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சடலத்தை புதைத்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்த போதிலும், சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...