களுத்துறையில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது!

Date:

களுத்துறையில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுக்கப்பட்ட 16 வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளதாகவும், இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை களுத்துறை வடக்கு பகுதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபர் வேறு இடங்களில் சிறு குழுக்களாக வகுப்புகளை நடத்தி அங்கும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டதை அடுத்து அவரை கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

குறித்த ஆசிரியர், மாணவிகளை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து களுத்துறை லாகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு தனது காரில் அழைத்துச் சென்று அவர்களை காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக முன்னதாக மேற்கொள்ளப்பட்டிருந்த விசாரணைகளில் இருந்து தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...