கொவிட் -19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றவும் – பொதுச் சுகாதார பரிசோதரகர்கள்

Date:

கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதரகர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

தற்போது, ​​கணிசமான எண்ணிக்கையிலான சந்தேகத்திற்கிடமான கொவிட் -19- தொற்றாளர்கள் நாடு முழுவதும் பதிவாகத் தொடங்கியுள்ளன, மேலும் அரசாங்க தகவல் திணைக்களம் கொவிட் -19 இறப்புகளின் எண்ணிக்கை குறித்து நாளாந்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

“இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, ​​​​பல வைரஸ் தொற்றுக்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கொரோனா நோயாளர்கள் பரவலாக அடையாளம் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொவிட் -19 நோயாளர்கள் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் அடையாளம் காணப்படுகின்றனர்.

எனவே, முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுதல், பொதுக் கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற கொவிட் -19 சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி மக்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்.

தற்போதைய வைரஸின் பரவல் ஒரு தொற்றுநோய் நிலைமையை ஏற்படுத்துமா மற்றும் ஒரு பாரிய பேரழிவாக மாறுமா என்பதை தீர்மானிக்க சோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை.

எனவே, கொவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதார பரிந்துரைகளை மக்கள் பின்பற்றுவது கட்டாயமாகும்” என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...