தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தில் மாற்றம்: வௌியான விசேட வர்த்தமானி!

Date:

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.

அதன்படி, உள்ளூர் பெரியவர்களுக்கு 200 ரூபாவும், சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணமாக 30 ரூபாவும், வசூலிக்கப்படும்.

முன்பு பெரியவர்களுக்கு 100 ரூபாவும், சிறுவர்களுக்கு 20 ரூபாவும் கட்டணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாவரவியல் பூங்காவிற்கு வெளிநாட்டு பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 3,000 ரூபாவாகவும், வெளிநாட்டு சிறுவர்களுக்கு 1,500 ரூபாவாகவும் உள்ளதாகவும் வசூலிக்கப்படவிருக்கின்றது.

முன்பு வெளிநாட்டு பெரியவர்களுக்கு 2,000 ரூபாவும், சிறுவர்களுக்கு 1,000 ரூபாவும் வசூலிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...