இன்று புத்தளம் கொழும்பு வீதியில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்தில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டு இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கினர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் முஹமட் பைஸல் ஆப்தீன் தலைமையில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.