நாடாளுமன்றத்தில் ஒரு தங்க திருடன் இருப்பதாக தாம் தொடர்ந்தும் கேட்க முடிந்தது எனவும் தற்போது இரண்டு தங்க திருடர்கள் இருக்கின்றனர் என்பதை கேட்க கூடியதாக உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்கள், போதைப் பொருள் முதலாளிகள், கல்,மணல் வியாபாரிகள், தரகு காகங்கள் இருக்கின்றனர் எனக்கூறி 225 பேரையும் விரட்ட வேண்டும் என்ற மக்கள் நிலைப்பாடும் உள்ளது.
இப்படியான நாடாளுமன்றம் சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் தலைவரை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.