அரபு அல்லாத நாடுகளில் அரபுக் கவிதையின் நிலவரம் பற்றிய ஆய்வரங்கொன்று அண்மையில் சவூதி அரேபிய மதீனா நகரில் இடம்பெற்றது.
அரசு மொழி பேசாத நாடுகளின் அரபு மொழியில் கவிதை படிக்கின்ற திறமைப் பெற்ற கவிஞர்களுக்கான இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துன் நாசர் ரஹ்மானி என்பவர் கலந்துகொண்டு பரிசில்களும் விருதையும் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை இந்நிகழ்வில் உலக நாடுகளிலிருந்து பல அரபுக் கவிஞர்கள் கருத்தாளர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
புத்தளத்திலிருந்து கருத்தாளராக அழைக்கப்படிருந்த அப்துன் நாசர் ரஹ்மானி ஹஸ்ரத் அவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.
அரபு மொழி பேசாதா ஒரு நாடு என்ற வகையில் இலங்கையைச் சேர்ந்த அறிஞர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தமை முஸ்லிம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தரும் விடயமாகும்.