‘பௌத்த வழிபாட்டுக்கு தமிழ் கூட்டமைப்பினர் தடையினை ஏற்படுத்தினால் கடும் தண்டனை வழங்க நேரிடும்’

Date:

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள ‘சியம் நிகாய’ பௌத்த வழிபாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடையினை ஏற்படுத்தினால் கடும் தண்டனை வழங்க நேரிடும் என்று ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையைக் காட்டி தூபி சின்னத்தை சுட்டிக்காட்டி, அந்த திணைக்களம் பௌத்த மதத்திற்காக மாத்திரமா செயற்படுகிறது என்று வினவியிருந்தார்.

அதற்கு பதிலளித்த சரத் வீரசேகர,

தொல்பொருள் திணைக்களத்தின் தூபி சின்னத்தை மாற்ற முடியாது. ஏனெனில், இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்து, அதனை கோவிலாக திரிபுபடுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் நேற்று (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

திணைக்களத்தின் சின்னத்தை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையாக தூபி காணப்படுகிறது. ஏனெனில், இலங்கை ஒரு பௌத்த நாடு.

ஆகவே, எக்காரணங்களுக்காகவும் தொல்பொருள் சின்னத்தை மாற்றியமைக்கப் போவதில்லை. புராதன தொல்பொருள்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல இனங்களுக்கும் உண்டு. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. ஆகவே, நாட்டு மக்கள் அனைவரும் புராதன தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் பேசும் மக்களை யுத்த பகடைக்காயாக பயன்படுத்தி செயற்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட தமிழ் பிரிவினை அரசியல்வாதிகள் கொழும்பில் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள்.

தமிழ் மக்கள் தொடர்பில் அப்போது கரிசனை கொள்ளவில்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவர்கள் தமிழர்களின் நலன் விரும்பிகள் போல் கருத்துரைக்கிறார்கள்.

சுமந்திரன் உட்பட பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த சின்னங்களை அழிக்க ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, வெறுப்பு பேச்சுக்களை வடக்கில் குறிப்பிட்டுவிட்டு கொழும்பில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால் இவ்வாறானவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பிற நாடுகளில் இவ்வாறு செயற்பட்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

பௌத்த மதத்தின் மேன்மை பொருந்திய சியம் நிகாயவின் 270ஆவது வருட நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பான மத அனுஷ்டானமாக இடம்பெறவுள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

இது முறையற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத அனுஷ்டானத்துக்கு கூட்டமைப்பினர் தடை ஏற்படுத்தினால் பாரிய அழிவுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதை கூட்டமைப்பினர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...