மணிப்பூர் மாநிலத்தில் ஓயாத இன வன்முறை: 40 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Date:

மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சில வாரங்களுக்கு முன்பு இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது.

இதனால் அம்மாநிலமே கலவர பூமியாக மாறியது. இந்த கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

நவீன ஆயுதங்களுடன் பொதுமக்களை தாக்குவது போன்ற அசம்பாவித செயல்களும் அரங்கேறின. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவப் படைகளை மத்திய அரசு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில், மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் M-16 மற்றும் ஏகே – 47 போன்ற ரைபிள் மற்றும் ஸ்னைபர் துப்பாக்கிகளை பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் எனவும் எனவே பொதுமக்களை பாதுகாக்க இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளை பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

ஷேக்மாய், சுக்னு, கும்பி, பேயங், சேரவ் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மணிப்பூர் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள அமித் ஷா மணிப்பூருக்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறைகள் நீடித்து வருகின்றன. இதனால் இம்மாநிலத்தில் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் மைத்தேயி இன மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

இன்னொரு பக்கம், மைத்தேயி மக்கள் இல்லாத தனி நிர்வாக அமைப்பு அல்லது தனி மாநிலத்தை தங்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்கின்றனர் குக்கி இன மக்கள்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...