யாழில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை ஆரம்பம்!

Date:

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் ஆடிப் பெருவிழாவிற்கு யாழ்ப்பாணம் செல்வா சந்நிதி ஆலயத்தில் இருந்து, பாத யாத்திரை இன்றைய தினம் சனிக்கிழமை ஜெயா வேல்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பமாகியுள்ளது.

செல்வச் சந்நிதி ஆலயத்தில் காலை நடைபெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து மோகன் சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாத யாத்திரைக் குழுத் தலைவர் ஜெயாவேல்சாமியிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டு, பாத யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்ககளில் உள்ள, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7மாவட்டங்களில் உள்ள 98ஆலயங்களைத் தரிசித்து, 46நாட்களில் , 815கிலோமீற்றர் தூரத்தை கடந்தது கதிர்காம ஆலயத்திற்கு இந்த பாதயாத்திரை சென்றடையும்.

இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாத யாத்திரையாக இந்த பாத யாத்திரை கருதப்படுகின்றது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...