அரை சொகுசு தனியார் பஸ்களை சேவையிலிருந்து நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்!

Date:

அரை சொகுசு தனியார் பேருந்துகளை சேவையில் இருந்து நீக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தக் கோரி மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

எந்தவொரு மாற்று வழியையும் தயாரிக்காமல் அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவை தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாகவும், இதற்கு அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அரை சொகுசு தனியார் பேருந்துகளை இயக்குவதில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் அதை அப்போது அரசால் செயல்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...