ஷெல் நிறுவனத்துடன் இணைந்து, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் RM Parks Inc நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
