கல்வியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கு 16 ஆம் திகதி நியமனம்!

Date:

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 39,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இம்முறை ஒரே நேரத்தில் இரண்டு மடங்கு ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் பயிலுனர்கள் ஏழாயிரம் பேருக்கு எதிர்வரும் 16ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனை தவிற தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் நிலவும் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய 26 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...