சாதாரண தர பரீட்சையின் போது விடை சொல்லிக் கொடுத்த ஆசிரியர் பணி நீக்கம்!

Date:

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் மாணவர்களுக்கு விடையளிப்பதற்காக ஒத்துழைப்பு நல்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஆசிரியர் ஒருவர் பரீட்சை நிலைய கண்காணிப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம், கருக்கங்குளம் விஜயபா பாடசாலை பரீட்சை நிலையத்தில் கடைமையில் இருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார் என்று வடமத்திய மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் (பரீட்சை) எஸ்.ஆர் பரியங்கர தெரிவித்தார்.

இந்த ஆசிரியர் அந்தப் பிரதேசத்தில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அவர், தன்னுடைய தனியார் வகுப்புகளுக்கு வருகைதந்த மாணவர்களுக்கே  விடையளிப்பத்றகு இவ்வாறு ஒத்துழைப்பு நல்கினார் என ஏனைய ​மாணவர்களின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவ்வாசிரியர் கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...