சிறுவர்களிடையே அதிகளவில் பரவும் காசநோய்!

Date:

நாட்டில் சிறுவர் காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் லேடி ரிட்ஜ்வே சீமாட்டி வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த வருடத்தின் முதல் காலாண்டில் குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட 59 சிறுவர்களும், கடந்த 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 49 சிறுவர்களும் பதிவாகியுள்ளனர்.

கடந்த 2022 மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 187 ஆகும். குழந்தை ஒன்றுக்கு தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே காசநோய் பக்டீரியாக்களால் பாதிக்கப்படலாம் என்றும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிருக்கு இந்த நோயினால் ஆபத்து உள்ளதாகவும் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா சுட்டிக்காட்டுகிறார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் மதிப்பீடுகளின்படி, இலங்கையில் காசநோயாளிகளின் மொத்த சதவீதத்தில் 08 வீதமானவர்கள் குழந்தைகள் ஆவர் எனினும் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள குழந்தை காசநோயாளர்கள் 03 வீதத்துக்கும் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

காசநோயாளிகளைக் கண்டறிய முடியாத நிலை காணப்படுவதால் சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உடல் எடையை சரியாக அதிகரிக்காமல் இருப்பது, இயல்பை விட உடல் எடையை குறைப்பது, அடிக்கடி இருமல் மற்றும் 02-03 வாரங்களுக்கு மேல் கழுத்து வீக்கம் போன்றவற்றை இந்த நோயின் அறிகுறிகளாக சுட்டிக்காட்டலாம் என தெரிவித்தார்.

இதேவேளை, வீட்டில் உள்ள காசநோயாளி ஒருவரிடமிருந்தோ அல்லது காசநோய் என அடையாளம் காணப்படாத ஒருவரிடமிருந்தோ வீட்டில் உள்ளவர்களிடமிருந்தோ குழந்தைகளுக்கு இந்நோய் பரவுவதாகவும் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளில் இருந்து பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோய் அறிகுறிகளின்றி குழந்தையின் உடலில் பரவக்கூடியது எனவும், எதிர்காலத்தில் இந்நோய் வராமல் தடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குவது மிகவும் அவசியம் எனவும் வைத்தியர் வலியுறுத்தியுள்ள்ளார்.

தற்போது, ​​இலங்கையில் காசநோய் பரிசோதனைக்கு தேவையான இலவச வசதிகள் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்காக குழந்தை வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் லேடி ரிட்ஜ்வே சீமாட்டி வைத்தியசாலையில் புதன்கிழமைகளில் காசநோய்க்கும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு வைத்தியர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் அதில் கலந்துகொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...