சுற்றுலாத்தளமாக மாற்றப்படவிருக்கும் ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை!

Date:

ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையை கொழும்பு நகருக்கு வெளியே மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே பிரதேசத்தில் ஒரே இடத்தில் நிர்வாக வளாகத்தை அமைப்பதற்கு மாற்று காணியை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தேச ‘புதிய கொழும்பு பாரம்பரிய நகரத் திட்டத்தின்’ கீழ், ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் அலரிமாளிகை கட்டிடம் மற்றும் பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் ஆகியவை சுற்றுலா தலங்களாக பாதுகாக்கப்படும் என்றார்.

இதனடிப்படையில், கொழும்பு நகரில் உள்ள மற்ற கட்டிடங்கள் முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளது.

அதன்படி, பொது தபால் நிலையம், வெளிவிவகார அமைச்சு கட்டிடம், பொலிஸ் தலைமையகம், விமானப்படை தலைமையகம், கடற்படை தலைமையகம், விசும்பய, ஷ்ரவஸ்தி (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விடுதி), கஃபூர் கட்டிடம், ஜவத்தை வீதியிலுள்ள நீர்ப்பாசன திணைக்கள கட்டிடம், வெலிக்கடை சிறைச்சாலைகள் மற்றும் பழைய பாதுகாப்பு காலி முகத்திடலில் உள்ள அமைச்சுக் கட்டிடம் என்பன குத்தகைக்கு விடப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...