ஜனாதிபதியுடன் சர்ச்சை?: தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவி விலகினார்!

Date:

ஜனாதிபதியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சில நாட்களுக்குப் பின்னர், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்ததாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

“தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், கடிதத்தின் பிரதியும் எனக்குக் கிடைத்துள்ளது.

பதவி விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் இடமொன்றுக்கு காணிகளை வழங்குவது தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,பணிப்பாளர் நாயகத்தை கடுமையாக சாடியுள்ளார்.

ஜனாதிபதி அவரிடம் “நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா?” என ஜனாதிபதி இதன் போது அவரிடம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...