ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (26) காலை நாடு திரும்பியுள்ளார்.
எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-650 என்ற விமானத்தில் டுபாயில் இருந்து இன்று காலை 09.10 மணியளவில் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .