ஜூலை 21 ரணில்-மோடி சந்திப்பு:கிரிட் இணைப்பு ஒப்பந்தம் கைசாத்திடப்படும்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த கூட்டம் ஜூலை 21ம் திகதி நடைபெற உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இதேவேளை   ஜனாதிபதி  புதுடில்லி விஜயத்தை முன்னிட்டு இந்தியா – இலங்கை கிரிட் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட கிரிட் இணைப்பு இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய படியாகும். முன்னதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, 2030ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் தேசிய மின் கட்டங்களும் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும், இந்தியா ஏற்கனவே எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முற்பட்டுள்ளதுடன் பொருளாதார நெருக்கடியின் போது, நாணய பரிமாற்றம், பணம் செலுத்துவதை ஒத்திவைத்தல் மற்றும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான கடன் வரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...