தலைதூக்கியுள்ள துப்பாக்கி வன்முறைகள் : தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு

Date:

இலங்கையில் துப்பாக்கி வன்முறைகள் தலைதூக்கியுள்ள நிலையில், தகவல் வழங்குபவர்களுக்கு வெகுமதிகளை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்களை கைது செய்ய உதவும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான T-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் வகையில் தகவல் வழங்கினால் 250,000 ரூபா வெகுமதியாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான கைதுகள் மற்றும் தகவல்களுக்கு 15 ஆயிரம் முதல் 250,000 ரூபா வரையில் வெகுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கி வன்முறைகளின் எண்ணிக்கை 48 ஐ தாண்டியுள்ள நிலையில், இந்த சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைத் தடுக்க சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தவறியதாக பொலிஸ்மா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொறுப்பதிகாரிகளின் (OIC) திறமையின்மையே இந்த பகுதிகளில் குற்றச்செயல்கள் தொடர்வதற்கு காரணம் என பொலிஸ்மா அதிபர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...