தொடரும் ஈஸ்டர் வேட்டை: வெலம்பொடவில் மற்றுமொரு இளைஞர் கைது!

Date:

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் தீவிரவாத விரிவுரைகள் மற்றும் ஆயுதப் பயிற்சிகளில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் நான்கு வருடங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முன் ஆயத்தமாக, ஹம்பாந்தோட்டை செட்டிகுளம் பகுதியில் மொஹமட் சஹ்ரான் நடத்திய தீவிரவாத விரிவுரை மற்றும் ஆயுதப் பயிற்சி முகாமில் பங்கேற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் கணனி பாடநெறியில் கல்வி கற்கும் கம்பளை வெலம்படையைச் சேர்ந்த அஜ்மல் சஹீர் அப்துல்லா என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...