நாடளாவிய ரீதியாக குறைந்த மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடுவதற்கு திட்டம்!

Date:

“தேசிய கல்வி மறுசீரமைப்பு” வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள பாடசாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியாக குறைந்த மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரியந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 3 வருடங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 300 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் கொத்தணி பாடசாலை முறை, தேசிய பாடசாலை அமைப்பு, தேசிய பாடசாலைகளுடன் இணைக்கப்பட்ட பாடசாலை வலையமைப்பு உருவாக்கப்படும் என்று திட்டமிடல் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், அதற்கான அபிவிருத்தி வளங்கள் அப்பாடசாலைகளில் இல்லையென குறிப்பிட்டார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 40,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை வழங்க வேண்டும் என்பதால் குறைந்த சதவீத மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலைகள் மூடப்படுகின்றன.

நூற்றுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப் பகுதிகளில் இத்தகைய பாடசாலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

இவ்வாறான பாடசாலைகள் மூடப்படுமாயின் அப்பகுதிகளில் உள்ள பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளை இழக்க நேரிடும். ஒதுக்குப்புறமான கிராமங்களில் வசிக்கும் பிள்ளைகளுக்கு 10 முதல் 14 கிலோமீட்டர் தூரம் வரை பாடசாலைகள் கிடைப்பதில்லை.

தேசியக் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தில் உள்ள நல்ல விடயங்களைச் செயல்படுத்தாமல், பொருளாதார ரீதியில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்டவற்றை மட்டுமே அரசு செயல்படுத்த முயல்கிறது.

இந்தத் திட்டத் திட்டத்தில் தொகுதி முறை, தொலைதூரக் கல்வி முறை, மாணவர் அடிப்படையிலான கல்வி முறை தொடர்பான அத்தியாவசிய முன்மொழிவுகளைத் தவிர்த்துவிட்டு, பாடசாலைகளை மூடுவதே முன்னுரிமையாகி 2000இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்  என்றார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...