ஹஜ் யாத்திரிகர்களுக்கான சிறப்பு ரயில் சேவையை இயக்கியது சவூதி

Date:

சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் சேவைகளை இயக்கியுள்ளது.

மினா, அராஃபத் மற்றும் முஸ்தலிஃபா இடையே யாத்திரிகர்களை ஏற்றிச் செல்லும் அல் மஷாயர் மெட்ரோ லைன், தற்போதைய ஹஜ் பருவத்திற்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்களை ஏற்றிச் செல்ல தயாராக உள்ளது.

இந்த மெட்ரோ  ரயில் 18 கிலோமீட்டர் பயணிப்பதுடன் இந்த ரயில் பாதையில் ஒன்பது ரயில்  நிலையங்கள் உள்ளன, இதில் மினா, அராபத் மற்றும் முஸ்தலிஃபாவில் தலா மூன்று உள்ளன.

இந்த பாதையின் கடைசி நிலையம் ஜமாரத் பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ஒரு மெட்ரோ ரயில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது மற்றும் மினாவில் இருந்து அராஃபத்திற்கு பயணிக்க 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

அல் மஷாயர் மெட்ரோ லைனில் 17 ரயில்கள் உள்ளன, அவை புனித தலங்களுக்கு சேவை செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஒரு ரயிலில் 3,000 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

இதன்மூலம் புனிதத் தலங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கலாம். சாலைகளில் நெரிசல் குறையும். மேலும், யாத்திரிகர்களும் தாங்கள் போக வேண்டிய புனிதத் தலத்திற்கு விரைவாக போக முடியும்.

அல் மஷார் மெட்ரோ ரயில் கடந்த 15 ஆண்டுகளில் யாத்திரிகர்களுக்கு சேவை செய்வதற்காக சவூதி அரேபியாவால் செயல்படுத்தப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்றாகும்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...