கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 29 கோடி ரூபா பெறுமதியான செப்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலையில் செப்பு கம்பிகள், ஆணிகள் மற்றும் மின்சார கேபிள்கள் என்பன இவ்வாறு விசமிகளால் திருடிச் செல்வது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
மேலும், ஏனைய அதிவேக நெடுஞ்சாலைகளிலும், புதிய களனி பாலத்திலும் ஆணிகள் மற்றும் செப்பு கம்பிகளும் இவ்வாறு தொடர்ந்து திருடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.