அமெரிக்க ஜனாதிபதிக்கும் – உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

Date:

உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடத்தை தாண்டியுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமலேயுள்ளது.

இதற்கிடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் எனப்படும் தனியார் இராணுவ அமைப்பு ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் இராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தார்.

இதனால் ரஷ்யாவில் ஆயுத புறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக எவ்ஜெனி புரிகோசின் தெரிவித்தார். இதனால் ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி குறித்து விவாதித்ததாகவும், அமெரிக்கா – உக்ரைன் நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் உக்ரைனின் தற்போதைய எதிர் தாக்குதல் குறித்து விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...