ஜாமியா நளீமியா எதை நோக்கி பயணிக்க வேண்டும்,எதை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் உணர்த்திய முன்னாள் அமைச்சர் ஹக்கீமின் உரை

Date:

ஜாமியா நளீமியாவின் 50 ஆண்டு பொன்விழா நிகழ்வும் அதன் பட்டளிப்பு நிகழ்வும்  சனிக்கிழமை (24 ) பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வு தொடர்பில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ள நிலையில் ஜாமியா நளீமிய்யாவின் பொன்விழா தொடர்பில் யு.எச் ஹைதர் அலி அவர்கள் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

 

இறைவனின் அருளும், நளீம் ஹாஜியார் எனும் மாமனிதரின் நல்லுள்ளமும், செல்வமும், கலாநிதி எம் ஏ. எம் சுக்ரியின் Modern Visionம் தான் நளீமியாவின் அபார வளர்ச்சிக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது.

அன்றைய நிகழ்வை அரசியல்வாதிகளை கொண்டு வந்து அலங்கரிக்காமல் இதை ஒரு Intellectual நிகழ்வாக திட்டமிடப்பட்டிருந்தது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.

அழைக்கப்பட்ட விசேட அதிதிகளில் நான்கு பேர் அரசியல் பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுடைய அறிவாளிகள் பின்னனிக்கே அங்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது பாராட்டக்கூடிய விடயம்.

அந்த அரசியல் பின்னனி கொண்ட ஆளுமைகளும் அவர்களுடைய உரைகளை தரமாக திட்டமிட்டு இன்டலெக்சுவல் முறையில் அமைத்திருந்தது மிகவும் பாராட்டத்தக்கது.

அதில் வீடியோ மூலம் தனது உரையை அனுப்பி வைத்திருந்த வெளியுறவு அமைச்சர் தனது உரையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பின்னணியின் ஒரு வரலாற்றை தொட்டு குறிப்பிட்டது மிகவும் வரவேற்கத்தக்க உரையாக அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில்  அனைத்து உரைகளையும் விட முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுடைய உரை என்னை மிகவும் கவர்ந்தது.

என்னை கவர்ந்தது மட்டுமல்ல அந்த நிகழ்வின் ஒரு பாராட்டத்தக்க Highly Intellectual உரையாகவும் அது அமைந்திருந்தது. அந்த மேடைக்கு தேவையான பொருத்தமான ஒரு உரையாகவும் அது அமைந்திருந்தது.

அமைச்சர் ஹக்கீம் அவர்கள் குறிப்பிட்டது போல எதிர்காலத்தில் நளீமியா எதை நோக்கி பயணிக்க வேண்டும், எதை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பதற்கு அமைய முன்னால் அமைச்சர் ஹக்கீமினுடைய உரை அமைந்திருந்தது.

இலங்கையினுடைய இரண்டு முக்கிய (பௌத்த பிரிவினாக்கள் )இன்று அது இலங்கையின் மிகப் பிரபலமான பல்கலைக்கழகங்களாக பரிணமித்திருக்கின்றது என்கின்ற விடயத்தையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஜாமியாவும் எதிர்காலத்தில் அப்படியான ஒரு பரிணாமத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உருப்பினர்களான கலாநிதி ரஞ்சித் பன்டார , மற்றும் இம்டியாஸ் பாகிர் மாகார் ஆகியோரும் உரை நிகழ்த்தி இருந்தனர்.

குறிப்பு:

இலங்கையினுடைய Educational Reform, கல்வித் திட்டம் பலமுறை மாற்றங்களுக்குட்பட்டு இருந்தாலும் ஜாமியா நளீமியா கலாபீடத்தினுடைய கல்வித் திட்டம் இவ்வாறான பரிணாம மாற்றங்களுக்குட்பட்டிருக்கின்றதா? காலத்துக்கு ஏற்பட்ட முறையில் சீர்திருத்தப்பட்டு இருக்கின்றதா? நவீன கல்வித் திட்டங்களில் பாடவிதானங்களின் மாற்றம் நளீமாயாவின் பாடவிதானத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றதா? என்ற கேள்வி கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அல்லது secular பாடவிதானங்களில் கலைப்பாடவதானங்களில் ஒரு குப்பிட்ட பாடங்களோடு தொடர்ந்தும் பயனிக்கப்போகிறதா?அல்லது காலத்தின் தேவைக் கேற்ப ஒரு பரிவர்த்த நிலைக்கு ஜாமியா நளீமியா கலாபீடம் இந்த 50ஆண்டு காலப்பகுதிக்கு பிறகாவது மாறுமாக இருந்தால், எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி வளர்ச்சியில் அது ஒரு புதுமை புரட்சியை படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நளீமியாவுக்கும் பிறகு 1985 களில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் International Islamic University Islamabad.  இன்று MBA, Management, Data Science என்று பல முன்னேற்ற படிகளை தான்டி செல்கிறது.

இன்று பொன் விழா காணும் ஜாமியாவும் எதிர்காலத்தில் அப்படியான ஒரு பரிணாம வளர்ச்சியை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...