ஜிம்பாப்வே உலகக் கிண்ண மைதானத்தில் தீ விபத்து!

Date:

ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உலகின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் நெதர்லாந்திற்கு எதிராக ஜிம்பாப்வே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மைதானத்தின் தெற்கு முனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. மேலும் 3 இற்கும் அதிகமான குரூப் போட்டிகள், சூப்பர் சிக்ஸ் போட்டிகள் மற்றும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டிக்கு இந்த மைதானம் பயன்படுத்தப்படுமா? என ஆய்வுக்குப் பிறகு தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...