நடாஷாவுக்கு முன்னர் ஞானசார தேரரை கைது செய்யுங்கள்: சந்திரிக்கா

Date:

நடாஷா எதிரிசூரிய பௌத்த சமயத்தை அவமதித்தார் என்று கைது செய்வதற்கு முன்னர் இஸ்லாம் சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய, கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களை தீ வைத்த ஞானசார தேரர் போன்றவர்களுக்கு எதிராக எடுக்க போகும் நடவடிக்கை என்ன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று அதிகாலை டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, இலங்கை பௌத்தர்கள் உண்மையான பௌத்த விழுமியங்களுக்கு அமைய வாழ்ந்திருந்தால், தற்போது நாடு இந்தளவுக்கான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்காது என கூறியுள்ளார்.

வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதில், நடாஷாவை விட ஞானசார தேரர், விஷமத்தானமான அழுத்தங்களை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

பௌத்த மதத்திற்கான முழுமையான கௌரவத்தை வழங்க வேண்டும் என்பதை தானும் ஏற்றுக்கொள்வதாகவும் அத்துடன் ஏனைய மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் எனவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் தமது நம்பிக்கை மற்றும் மதத்தை பின்பற்றும் உரிமை இருக்க வேண்டும்.

பௌத்தர்கள் என்ற வகையில் கருணை, இரக்கம் மற்றும் அக்கறை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தி கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டு தற்போது அண்மையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகபேறு பிரிவின் மருத்துவர் சாஃபி தொடர்பாக நாடு முழுவதும் தவறான செய்திகளை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த நடவடிக்கையை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் தாமதமாகவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...