நாடாளுமன்ற விவகாரங்களுக்கான விசேட குழு கூட்டம் இன்று!

Date:

அடுத்த மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை  உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை விவாதிப்பதற்காக அவசர நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த அவசர நாடாளுமன்றக் கூட்டம் காரணமாக அனைத்து அமைச்சர்களையும் இந்த வாரம் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...