அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் நாளை (13) காலை 6. 00 மணி வரை இருபது மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கோரக்காபிட்டிய, சித்தாமுல, ஆரவ்வல, ரத்மல்தெனிய, மஹரகம – பிரியந்தல வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதவல வீதி, பொகுந்தர வீதி மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.