நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் !

Date:

நேற்று(31) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாக அமைந்துள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது அதற்கமைய மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் புதிய விலை 245 ரூபாவாகும்.

இலங்கை தொழில்நுட்ப மண்ணெண்ணெய் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 270 ரூபாவென மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்  சானக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...