பலஸ்தீனியர்கள் உயிரிழப்பிற்கு எதிராக இஸ்ரேலியர்கள் பேரணி

Date:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தின் நீதித்துறையை மறுசீரமைப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டங்களையும், நாட்டில் பலஸ்தீனிய சமூகங்களை தாக்கும் கொடிய வன்முறையையும் எதிர்த்து இஸ்ரேல் முழுவதும் பல நகரங்களை முற்றுகையிட்டு இலட்சக்கணக்கான மக்கள் 23 வது வாரமாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே ஆரம்பமாகிய இப்போராட்டத்தில் தற்போது இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட சட்ட மாற்றங்களை தாமதப்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் அதனை இரத்து செய்யும் வரை தாங்கள் இப்போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, சுமார் 102 பலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் வன்முறையில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

இன்று முதல் மின்சார சபையில் மாற்றம்

இலங்கை மின்சார சபையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் இன்று முதல் 6...

தேசிய நலன் கருதி PSTA-வைக் கைவிடுமாறு ஜனாதிபதியிடம் 14 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தல்!

(தேசிய சூரா சபையின் (NSC) பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்....

ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு...

கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...