முட்டை,கோழி இறைச்சி விலை மூன்று மாதங்களுக்கு பின்னர் குறையும்

Date:

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கோழிப்பண்ணை தொழில் வளர்ச்சி காரணமாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.

இலங்கைக்கு முட்டைகளை தொடர்ந்து இறக்குமதி செய்வதல்ல, கால்நடை வளர்ப்புத் திட்டத்தை வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்குவதற்கான ஏற்றுமதி சார்ந்த திட்டமாக மாற்றுவதே தனது இலக்கு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு கோழிப்பண்ணை தொழில் கணிசமான பங்களிப்பை வழங்குவதுடன், நாடு கோழிப்பண்ணை உற்பத்தியில் பல வருடங்களாக நிலையான வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்த வளர்ச்சியானது முட்டை மற்றும் கோழி இறைச்சி இறக்குமதியின் தேவையை குறைப்பதற்கு வழிவகுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...