எரிவாயு மற்றும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்த போதிலும் தமக்கு பலன் கிடைக்கவில்லை என ஹட்டன் பிரதேச நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், குறைக்கப்பட்ட விலைகளுடன் ஒப்பிடும் போது வர்த்தகர்கள் அதன் பயனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என ஹட்டன் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்திருந்தாலும் ஹட்டன் உள்ளிட்ட பெருந்தோட்டங்களின் பிரதான நகரங்களில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சமைத்த உணவின் விலை குறைக்கப்படவில்லை.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளதாக கூறினாலும் ஆனால் அந்த பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களே இதனால் பயனடைவதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர்.
இதேவேளை அதிகரித்த மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் மேலும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றை பார்க்கும்போது தமது உணவகங்களில் சமைத்த உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.