ஹஜ் செய்வதற்கான தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்திருந்தால் அவர் மீது ஹஜ் கடமையாகும்: ஜம்இய்யதுல் உலமா பத்வாப் பிரிவு

Date:

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஹஜ் கடமையாவதற்கான மாதிரி வழிகாட்டலொன்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ள நிலையில் ஹஜ் வழிகாட்டல் தொடர்பிலான மூன்றாவது வழிகாட்டலாக இதனை உலமா சபை வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டலில் ஹஜ் கடமைக்கான பணத்தை தன்னிடமிருக்கும் சொத்துக்களில் இருந்து பெறுவதற்கான வழிகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

தன்னிடம் கைவசமுள்ள பணம், வேறு வருமானங்கள், தகுதிக்கு மேலதிகமான வீடு, வியாபாரத்தில் செய்துள்ள முதலீடுகள் இவற்றிலிருந்து பணத்தைப் பெற்று ஹஜ் செய்ய முடியும்.

இவற்றிலிருந்து பெறப்படும் பணம் ஹஜ்ஜுக்குச் சென்று வருவதற்கான தொகையை அடைந்து அத்தொகைப் பணம் அவருடைய பராமரிப்பில் உள்ளவர்களுக்குத் தேவையான செலவு மற்றும் அவர் வழங்க வேண்டிய கடன் தொகையை விட மேலதிகமானதாக இருந்தால் அவர் மீது ஹஜ் கடமையாகிவிடும் என குறித்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்குப் பொறுத்தமான வீடொன்றில்லாமல் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மீது ஹஜ் கடமையில்லை எனவும் குறித்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டலில் வழங்கப்பட்டுள்ள உதாரணத்தின்படி ஹஜ் செய்வதற்காக முகவர்களுக்கு வழங்க வேண்டிய தொகைக்குச் சமனான தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்திருக்கும் ஒருவர் அந்த முதலீட்டை மீளப் பெற்று ஹஜ் செய்வது கடமையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டலின்படியே இலங்கை வாழ் முஸ்லிம்களின் மீது ஹஜ் கடமையாகிறது எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...