2023 வாக்காளர் இடாப்பில் ஒன்லைன் மூலம் பதிவு செய்யலாம்

Date:

2023 வாக்காளர் இடாப்பில் ஒன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

www.elections.gov.lk என்னும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, வாக்காளர்கள் தம்மை பதிவு செய்ய முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2023 வாக்காளர் இடாப்பிற்கான திருத்தங்கள் இந்நாட்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவங்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

கணக்கெடுப்பு படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்வதற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...