நல்லெண்ண விஜயமாக இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் கப்பல் ‘திப்பு சுல்தான்’ புறப்பட்டது

Date:

ஜூன் 18 முதல் 20 வரை வெற்றிகரமான 3 நாள் நல்லெண்ண விஜயத்திற்குப் பிறகு பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “திப்பு சுல்தான்” கொழும்பு துறைமுகத்திலிருந்து இன்று (20) புறப்பட்டு சென்றது.

இதன் போது இலங்கை கப்பல் கடற்படை வீரர்களால் சம்பிரதாய  பிரியா விடையும்  வழங்கப்பட்டது.

இவ்விஜயத்தின் போது, கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் ஜவாத் ஹுசைன் மேற்கு கடற்படை தளபதியை சந்தித்தார்.

மேலும் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள், இலங்கை கடற்படையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டதுடன், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட நட்புறவு விளையாட்டு  நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

அத்துடன், இலங்கை கடற்படை அதிகாரிகள்  பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “திப்பு சுல்தானை” பார்வையிட்டனர்.

இவ்விஜயத்தின் சிறப்பம்சமாக, நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான திப்பு சுல்தானில்  இரவு விருந்துபசாரம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அமைச்சர்களான பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், ரோஹன திஸாநாயக்க, அனுராதா ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜெனரல் ஷவீந்திர சில்வா, லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே,வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா,எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பரூக் பர்கி, நட்பு நாடுகளின் தூதுவர்கள்/ உயர் ஸ்தானிகர்கள்,இலங்கை ஆயுதப் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள்,பாதுகாப்பு ஆலோசகர்கள்/இணைப்பாளர்கள், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள்,  மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத்தெரிவித்த கப்பலின் தளபதி கேப்டன் ஜவாத் ஹுசைன்,

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே வலுவான உறவு இருப்பதாகவும் இரு நட்ப நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர, பொருளாதார, கலாச்சார மற்றும் பாதுகாப்பு உறவுகளின் வெளிப்பாடாக இந்த விஜயம் அமைந்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

இதன் போது உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சிறந்து விளங்குவதாகவும் கூறினார்.

சமீபத்திய உயர்மட்ட இருதரப்பு வருகைகள் மற்றும் தொடர்புகள் இதற்கான சான்றுகள் ஆகும் என்றும்  வரலாற்று ரீதியாக இரு நாடுகளும் தேவைப்படும் நேரங்களில் இரு தரப்பிலும் உதவிக்கரம் நீட்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதி தினத்தில், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “திப்பு சுல்தான்” இலங்கை கடற்படை கப்பலான கஜபாஹுவுடன் இணைந்து  இரு கடற்படைகளுக்கு இடையே  பரஸ்பர ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பய ற்சி நிகழ்வொன்றையும் நடத்தியது.

 

Popular

More like this
Related

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...