Online கடவுச்சீட்டு: இதுவரை 3200 விண்ணப்பங்கள் பதிவு!

Date:

இணைய வழி கடவுச்சீட்டு முறைமையின் கீழ் இதுவரை 3 ஆயிரத்து 265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத செயற்பாடுகளை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களுக்கான சேவையை இலகுபடுத்தவும், இணைய வழியில் விண்ணப்பம் கோரல் திட்டம் கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறைமையின் ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பதாரர்கள் தங்களது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் முறைப்பாடு அளிக்க அல்லது கணினி தொடர்பான தகவல்களைப் பெற, 1962 என்ற அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் உப அலுவலகங்கள் இணையவழியில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்த நபர்களின் கைரேகைகளை ஏற்றுக்கொள்ளும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...

பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் இடியுடன் மழை

இன்று (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

Aplikacja Kasyno Na Prawdziwe Pieniądze, Aplikacje Hazardowe 2025

10 Najlepszych Gier Paypal, Które Szybko Wypłacają Prawdziwe PieniądzeContentTop-10...

Best Online Casinos Australia 2025 Trusted & Safe Au Sites

Unveiling Secrets Regarding Thriving In Online Casino Online!"ContentSuper Slots...