அல்லாமா இக்பால் புலமைப் பரிசு தேர்வு முடிவுகள் ஆகஸ்டில்!

Date:

பாகிஸ்தான் அரசால் வழங்கப்படும் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் தேர்வின் முடிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம், அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்திற்கான தேர்வுப் பரீட்சையினை கடந்த மே மாதம் 29ம் திகதி முதல் ஜூன் 4 வரை இலங்கையில் நடத்தியது.

புத்தளம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் நாடளாவிய ரீதியில் இருந்து மாணவர்கள் இத்தேர்வில் கலந்துகொண்டனர்.

இத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும். மேலும், தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உயர் கல்வி ஆணையத்தின் தலைவரினால் வழங்கப்படும்.

பாடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைப் பொறுத்து, கல்வி நடவடிக்கைகள் இவ்வருட ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும்.

பல்வேறு இனங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...