அவிசாவளையில் இலஞ்சம் பெற்ற உயர் அதிகரிகள் இருவர் கைது!

Date:

அவிசாவளை மாநகர சபையின் பதில் செயலாளரும், வருவாய் பரிசோதகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று (24) குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பேருந்து நிலைய புதிய வர்த்தக கட்டிடத் தொகுதியில் வர்த்தகம் நிலையம் ஒன்றின் உரிமையை விரைவாக வழங்குவதற்காக கூறி இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

குறித்த இரு அதிகாரிகளையும் அவிசாவளை மாநகர சபையினுள் இலஞ்சம் பெறும் போதே கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...