இலங்கை அதிகாரிகள் மக்களின் வலுவான தீர்மானங்களின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும்

Date:

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

தனது விஜயத்தின் போது, பொருளாதார ஸ்திரத்தன்மையை மீள எட்டுவதற்கான நிதி நடவடிக்கைகள், வருமான வழிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்திலும் வெளிப்படைத்தன்மையுடனும் கடனைப் பெறுவதற்கான உத்திகளைப் பற்றி கலந்துரையாடுமாறு இலங்கை அதிகாரிகளை தான் ஊக்குவித்ததாக கென்ஜி ஒகமுரா தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல், நிர்வாகத்தை வலுப்படுத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் பொருளாதார மறுசீரமைப்பின் நோக்கம் என கென்ஜி ஒகமுரா தெரிவித்துள்ளார்.

முன்னரை விட, இலங்கை அதிகாரிகள் இலங்கை மக்களின் வலுவான தீர்மானங்களின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கண்டியில் கோலாகலமாக நடைபெற்ற ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ வரலாற்று நூலின் அறிமுக விழா!

இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும்அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம்...

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...