இலங்கையின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்,தெரிவித்துள்ளார்.
பாரிஸில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு மிகவும் நல்லது.
தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் வலுவான உரிமையை நான் அன்புடன் வரவேற்றேன்.
இலங்கையின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என அவர் ட்வீட் செய்துள்ளார்.