ஒரு நாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணம் குறைப்பு

Date:

ஒரு நாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு நாள் சேவை மூலம் கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் 20,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்ட நிலையில் தற்போது அதனை 15,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக குடிவரவு , குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறையில் அதனை குறைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய திட்டத்தின் கீழ், ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்போர் வழமையான முறையில் 14 நாட்களுக்குள் தமக்கான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஒன்லைன் மூலம் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...