எரிவாயு சிலிண்டரின் விலை குறைவடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பகுதியில் விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியாக 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவாக விற்பனையாகிறது.
அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மீண்டும் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.