வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தற்கான கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் 100,000 ரூபா செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.