பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது குழந்தையும் குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் தற்போது தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது கணவரிடம் இருந்து இந்த நோய் பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, தாய்க்கும், சேய்க்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனே சிகிச்சைகளை பெற்று கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.