கஜேந்திரகுமார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே பாராளுமன்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்: சபாநாயகர்

Date:

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே  பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய வேண்டும் எனவும், அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் எனவும் பொலிஸார் என்னிடம் தெரிவித்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு சபாநாயகர் பதிலளித்தார்.

“பொலிஸார்  தம்  கடமையைச்  செய்வதிலிருந்து எம்மால் தடுக்க முடியாது” என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சித்தாந்தங்களுடன் நாங்கள் உடன்படவில்லை ஆனால் பாராளுமன்றத்திற்கு வந்து அறிக்கை வெளியிட அவருக்கு உரிமை இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...